"அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை" - கே.எஸ்.அழகிரி டுவிட்டரில் விமர்சனம்
|கவர்னரை சந்தித்து அண்ணாமலை தன் மலிவான அரசியலை அரங்கேற்ற முயற்சிக்கிறார் என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
சென்னை,
செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தபோது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலை கூறியது போல் மத்திய பாதுகாப்பு ஏஜென்சியிடம் இருந்து தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வந்த மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காததாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை கூறி வருகிறார். டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களும் அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என மறுத்திருக்கிறார்.
மோடி வந்து சென்ற 4 மாதங்களுக்கு பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற முயற்சிக்கிறார். கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை."
இவ்வாறு கே.எஸ்.அழகிரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வந்த மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காததாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை கூறி வருகிறார்..
DGP சைலேந்திர பாபு அவர்களும் அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என மறுத்திருக்கிறார். pic.twitter.com/67D2yXavKS